WORLD TAEKWONDO CHAMPIONSHIP
கொரியாவில் நடந்த முடிந்த அனைத்துலக தெக்வோன்டோ போட்டியில் தெலுக் பங்லிமா காராங் தமிழ்ப்பள்ளி மாணவர் சாதனை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பது காலங்காலமாக நிருபிக்கப்பட்டு வரும் உண்மையாகும் . கல்வி கேள்விகளாகட்டும் விளையாட்டாக இருக்கட்டும் , நமது இந்தியர்களின் சாதனைகள் யாவும் சரித்திரத்தில் எழுதப்படுள்ளன . இந்த சரித்திரம் அப்படியே நின்று விடக்கூடாது . நாங்களும் சரித்திரம் படைப்போம் என்று நம்பிக்கையுடன் அனைத்துலக தெக்வோன்டோ போட்டியில் கலமிரங்கி தங்கப்பதக்கத்தை வாகைசூடிய 6 ம் ஆண்டு மாணவர் விரோச்சன் இளங்கோவன் . அண்மையில் கொரியா நாட்டில் நடந்து முடிந்த அனைத்துலக தெக்வோன்டோ போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்த நம் தெலுக் பங்லிமா காராங் தமிழ்ப்பள்ளி சார்ந்த மாணவர் விரொச்சன் இளங்கோவன் ஆவார் . இப்போட்டியில் 64 நாடுகள் கலந்து கொண்டனர் . ஜூனியர் பிரிவு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளரையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடினார் . மாணவர் இ . விரோச்சனை தெ...