WORLD TAEKWONDO CHAMPIONSHIP


கொரியாவில் நடந்த முடிந்த அனைத்துலக தெக்வோன்டோ போட்டியில்

தெலுக் பங்லிமா காராங் தமிழ்ப்பள்ளி மாணவர் சாதனை



 


தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பது காலங்காலமாக நிருபிக்கப்பட்டு வரும் உண்மையாகும்.கல்வி கேள்விகளாகட்டும் விளையாட்டாக இருக்கட்டும்,நமது இந்தியர்களின் சாதனைகள் யாவும் சரித்திரத்தில் எழுதப்படுள்ளன.

இந்த சரித்திரம் அப்படியே நின்று விடக்கூடாது.நாங்களும் சரித்திரம் படைப்போம் என்று நம்பிக்கையுடன் அனைத்துலக தெக்வோன்டோ போட்டியில் கலமிரங்கி தங்கப்பதக்கத்தை வாகைசூடிய 6ம் ஆண்டு மாணவர் விரோச்சன் இளங்கோவன்.

அண்மையில் கொரியா நாட்டில் நடந்து முடிந்த அனைத்துலக தெக்வோன்டோ போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்த நம் தெலுக் பங்லிமா காராங் தமிழ்ப்பள்ளி சார்ந்த மாணவர் விரொச்சன் இளங்கோவன் ஆவார்.இப்போட்டியில் 64 நாடுகள் கலந்து கொண்டனர்.ஜூனியர் பிரிவு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளரையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.


 

மாணவர் .விரோச்சனை  தெக்வோன்டோ தற்காப்பு பயிற்சியில் ஈடுபடுத்திய தன் குடும்பத்திற்கு பள்ளியின் தலைமையாசிரியர் குமாரி வாசுகி மலையாலம் அவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.வென்மணி அவர்கள் வாழ்த்துகளையும் நன்றியினையும் மகிழ்வுடன் தெவித்துக் கொண்டார்கள்.

மேலும் இம்மாணவனுக்கு பயிற்ச்சி அளித்த மாஸ்டர் அருள்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்  பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் செயலவை உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டனர்.மேலும் இப்பள்ளியில் இது போன்ற சாதனை தொடர வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டார்.

 
6ம் ஆண்டு வகுப்பாசிரியர் திருமதி ஜெ.சாந்தி அவர்களும் சக நண்பர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்து தன் நண்பனுக்கு கைக்கடிகாரம் ஒன்று பரிசு வழங்கி வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.மேலும் விரோச்சன் இளங்கோவன் கல்விகேள்விகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Comments

Popular posts from this blog

Rahsiah SJKT Telok Panglima Garang dalam sukan - Perancangan,Pengorganisasian,Kepimpinan dan Pengawalan

Melahirkan atlet pelapis SJKT Telok Panglima Garang- Penyelaras Dun Sijangkang Yang Berusaha Roznizan Bin Ahmad

Seminar Motivasi dan Bengkel UPSR